Sunday, May 17, 2020

பிற மதத்தவரை மதித்தல்


உலகத்தில் பல சமயங்கள் இருக்கின்றன. அவைகளைப் பின்பற்றுவோரும் பலர் இருக்கின்றனர். அவர்கள் முஸ்லிம்களென்றும்,கிறிஸ்தவரென்றும், இந்துக்களென்றும், பௌத்தரென்றும் பலவாறு அழைக்கப்படுகின்றனர். நாம் எமது சமயத்தை மதிப்பது போல மற்றவர்களும் தங்களது சமயங்களை மதிக்கின்றனர்.

எனவே, எம்மதத்தினராயினும் அவர்களை நாங்கள் கௌரவிக்க வேண்டும். அயல் வீட்டார் அந்திய மதத் தவராக இருப்பினும் அவர்களை ஆதரிக்க வேண்டுமென்பது இறைவனின் கட்டளையாகும். பிறர் வணங்கும் தெய்வங்களை நிந்திப்பது அழகல்ல. வீணான சண்டை, சச்சரவுகள் உண்டாக இடமளிக்கக் கூடாது. அவர்களின் வணக்கத் தலங்களுக்கு நாம் சென்று அவர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது.


இலங்கையில் பல மதங்களையும் சேர்ந்தவர்கள் வாழ்கின்றார்கள். அவர்கள் யாவரோடும் சந்தோஷமாக வும் சமாதானமாகவும் வாழ்வது நம் கடனாகும்.


நம்மில் அமைதி, சமாதானம், சாந்தி நிலவ அல் குர்ஆனும் நபி மொழியும் நமக்கு வழிகாட்டிகளாக உள்ளன .


அல்லாஹு தஆலா மனிதர்களையெல்லாம் ஒரே வித மாகவே படைத்துள்ளான். எல்லாரும் மனித குலத்தவர் களே. இந்த விதமான பரந்த எண்ணத்துடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.


நம்மை சூழவுள்ள எல்லாச் சமயத்தவர்களுடனும் சகோதரர்கள் போல் பழகவேண்டும். என்றாலும் எமது மார்க்க அடிப்படையிலிருந்து விலகிச் செல்லாமல், நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.


நமது எண்ணம், சொல், செயல் என்பவற்றால் மற்ற சமயத்தவரின் மதிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.




நுஸ்லா ஜிஹாஸ்



Advertisement

No comments:

Post a Comment


Popular Posts