Thursday, May 21, 2020

சுய மரியாதை


உலகத்தில் நாங்கள் தனித் தனியே பிறக்கின்றோம் . தாய், தந்தை, சகோதரர் சகோதரிகளோடு பழகுகிறோம். குடும்பத்தாரோடு உறவாடுகிறோம். ஊரிலுள்ள மக்க ளுடன் சேர்ந்து வாழுகிறோம். நாட்டு மக்களில் ஒருவராக ஆகின்றோம். எனவே , நாங்கள் நல்ல குடிமக்களாக விளங்க வேண்டும். மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும். மரியாதையை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் சொந்த மரியாதை , சுயகௌரவம் இருக்கின்றது. அதைப்பேணுவதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். நமது மரியாதை கெட்டுப்போக இடமளிக்கக் கூடாது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமது சிறுவயதிலிருந்தே சுய மரியாதையுள்ளவர்களாக வாழ்ந்தார்கள். தங்களது மரியாதை பறிபோவதை அவர்கள் விரும்பவில்லை. அதனால் அவர்கள் பெரிதும் மதிக்கப்பட்டார்கள். அவர்களின் இஸ்லாமிய பிரசாரத்திற்கும் அது மிகவும் உதவியாக இருந்தது.


மனம் போனபடி நடப்பதும், ஊதாரியாகத் திரிவதும், ஒழுக்கமில்லாத செயல்களில் ஈடுபடுவதும். எமது சுய மரியாதையை நாம் இழப்பதற்குக் காரணங்களாக அமைகின்றன. உங்களை யாராவது ' கள்வன்’ என்று சொல்வதை நீங்கள் விரும்புவீர்களா ? விரும்பவே மாட் டீர்கள். சுயமரியாதை இழந்தவர்களை எவரும் மதிப் பதில்லை. அவர்களுக்கு உரித்தான அந்தஸ்தையும் கொடுப்பதில்லை. நாட்டிலோ ஊரிலோ குடும்பத்திலோ அவர்கள் கௌரவமான மனிதராக மதிக்கப்படவும் மாட்டார்கள்.


பாடசாலையில் எத்தனையோ மாணவர்கள் இருக் கின்றனர். அவர்களில் தங்களின் மரியாதையைக் காத்துக் கொள்பவர்களே மதிக்கப்படுகின்றார்கள். ஆசிரியர்களும் கூட கௌரவிக்கின்றார்கள். மாணவர் தலைவர் போன்ற பொறுப்பான வேலைகளையும் பதவிகளையும் கொடுக் கின்றார்கள்.


மரியாதையைக் காப்பாற்றுபவர் உயர்வு பெறுவார்.



நுஸ்லா ஜிஹாஸ்




Advertisement


No comments:

Post a Comment


Popular Posts